மாமன்னன் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். விநியோகிஸ்தர், தயாரிப்பாளர் என பயணத்தை தொடங்கி அதன் பிறகு ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிய பிறகு பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது அரசியலில் அமைச்சராகி விட்ட இவர் தொடர்ந்து அரசியலில் முழு கவனம் செலுத்த இனி படங்கள் நடிக்கப் போவதில்லை என முடிவெடுத்து தனது இறுதி படம் என மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார்.

மாமன்னன் என்ற பெயரில் நேற்று உலகம் முழுவதும் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் இடம் பெற்றுள்ள வடிவேலு மற்றும் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நடிப்பு பாராட்டப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் மட்டும் 900-க்கும் அதிகமான திரையரங்குகளில் இந்த படம் வெளியான நிலையில் உலகம் முழுவதும் சேர்த்து முதல் நாளில் கிட்டத்தட்ட 5.5 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

சனி மற்றும் ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் இந்த நாட்களில் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.