மாமன்னன் திரைப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

தமிழ் சினிமாவில் பிரபல விநியோகிஸ்தர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளுடன் வளம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். முன்னணி நடிகராகவும் கலக்கி வரும் இவர் தற்போது அரசியலில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார். அதனால் படங்களில் நடிப்பதை தவிர்க்க இருக்கும் இவர் தனது கடைசி படமாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘மாமன்னன்’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

பகத் பாஸில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இப்படம் நேற்றைய முன் தினம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டையாடி வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் வெற்றியை மாமன்னன் படகுழுவினர் படத்தின் இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ ஆர் ரகுமானுடன் இணைந்து கேக் வெட்டி செலபரேட் செய்துள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வட்டமடித்து வருகிறது.