மாமன்னன் படத்தில் இரண்டு நாள் வசூல் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். விநியோகிஸ்தர், தயாரிப்பாளர் என பயணத்தை தொடங்கி அதன் பிறகு ஹீரோவாக நடிக்க தொடங்கியவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்தார்.

இதனை அடுத்து அரசியலில் இறங்கி எம்எல்ஏவாக வெற்றி பெற்ற இவர் தற்போது விளையாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இதனையடுத்து இனி முழு நேர அரசியலில் ஈடுபட போவதாக சொல்லி தனது கடைசி படமாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் என்ற படத்தில் நடித்தார்.

வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாஹில் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் நாளில் இந்த படம் 5.50 கோடி ரூபாய் வசூல் செய்து இருந்த நிலையில் இரண்டாவது நான்கு கோடி ரூபாய்க்கு அதிகமாக வசூல் செய்துள்ளது.

இதன் மூலம் இரண்டு நாளில் இந்த படம் 10 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. படத்தின் பட்ஜெட் 35 கோடி ரூபாய் என சொல்லப்படும் நிலையில் வெகுவிரைவில் லாபத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.