மாமன்னன் திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வரும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் “மாமன்னன்”. ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கள் பாடல் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வந்ததை தொடர்ந்து இன்று ஏ ஆர் ரகுமான் இசையில் அவரே பாடி அசத்தியிருக்கும் செகண்ட் சிங்கிள் பாடல் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் மாமன்னன் திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா குறித்த அப்டேட் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்படி இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் வரும் ஜூன் 1ஆம் தேதி நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.