மாமன்னன் திரைப்படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலுக்கான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் தற்போது மாறி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாமன்னன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் வடிவேலு, ஃபஹத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வைரலானதை தொடர்ந்து தற்போது இப்படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலுக்கான அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி மாமன்னன் திரைப்படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல், வருமே 27 ஆம் தேதியான நாளை வெளியாகும் என்பதை போஸ்டருடன் அறிவித்துள்ளது. அது தற்போது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்து வைரலாகி வருகிறது.