சர்வதேச விழாவில் நான்கு பிரிவுகளில் விருதுகளை அள்ளிச் சென்றுள்ளது விஜய் சேதுபதியின் மாமனிதன் திரைப்படம். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

விஜய் சேதுபதியின் நடிப்பில் கடந்த ஜூன் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியான “மாமனிதன்” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி,குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தை ஒய் எஸ் ஆர் பிலிம்ஸ் சார்பாக யுவன் சங்கர் ராஜா தயாரித்திருக்கும் இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். இப்படத்தை தமிழ்நாடு மற்றும் கேரளாவில் ஸ்டூடியோ 9 சார்பில் ஆர் கே சுரேஷ் வெளியிட்டிருந்தால். இப்படம் ரசிகர்களாலும் திரை பிரபலங்களாலும் பல பாராட்டுகளை பெற்று வந்த நிலையில் ஒரு சில விருதுகளையும் அவ்வப்போது பெற்று வருகிறது.

அந்த வகையில் தற்பொழுது நான்கு பிரிவுகளில் புதிய விருது ஒன்றை பெற்றுள்ளது. அதாவது பூட்டான் நாட்டில் நடைபெற்ற Druck சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த சர்வதேச திரைப்படம், சிறந்த குடும்ப படம், சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த நடிகர் என நான்கு பிரிவுகளில் விஜய் சேதுபதியின் இந்த மாமனிதன் திரைப்படம் விருதுகளை பெற்றுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.