எழுத்தாளர் விவேக் தனது twitter பக்கத்தில் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு நெகிழ்ச்சியான பதிவை பகிர்ந்து இருக்கிறார்.

தென்னிந்திய திரை உலகில் பிரபல பாடலாசிரியராக வளம் வருபவர் விவேக். தளபதியின் தீவிரமான ரசிகரான இவர் கடந்த மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்திற்கும் பாடலாசிரியராக பணி புரிந்திருந்தார். இவரது பாடல் வரிகளில் தமன் இசையமைப்பில் உருவாகி இருந்த அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படத்திற்கு கூடுதல் பலத்தை தந்திருந்தது.

இந்நிலையில் விவேக் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் சில பந்தங்கள் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை, உங்களின் இந்த நம்ப முடியாத பயணத்தில் என்னை மூத்த சகோதரர் போல் நேசித்து கவனித்துக் கொண்டீர்கள், எனது வாழ்நாள் முழுவதும் உங்களை நேசிக்கிறேன் மை தளபதி என்று பதிவிட்டு அவர் தளபதியிடம் கன்னத்தில் முத்தம் பெறுவது போல் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து நெகிழ்ச்சி அடைந்துள்ளார். அது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.