தளபதி 67 படத்துக்காக லோகேஷ் கனகராஜ் வாங்கும் சம்பளம் எவ்வளவு என்பது பற்றி தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் கைதி என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ். இந்த படங்களின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் கூட்டணியில் உருவான மாஸ்டர் படத்தை இயக்கினார்.

இந்த படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தை இயக்கினார். விக்ரம் படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி என எக்கச் சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். மேலும் சூர்யா ரோலக்ஸ் என்ற சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார்.

விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் மீண்டும் தளபதி விஜய்யை வைத்து உருவாகவுள்ள தளபதி 67 படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த படத்தை மாஸ்டர் படத்தை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் இதுவரை 4 கோடி சம்பளம் வாங்கி வந்த லோகேஷ் கனகராஜ் இந்த படத்திற்காக 10 கோடி சம்பளம் வாங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. லோகேஷ் ராகுல் திறமைக்கு 10 கோடிக்கும் அதிகமாகவே தாராளமாக சம்பளம் தரலாம் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.