ரஜினியின் தலைவர் 171 திரைப்படம் குறித்து லோகேஷ் கனகராஜ் பகிர்ந்து இருக்கும் தகவல் வைரலாகி வருகிறது.

இந்திய திரை உலகில் மாபெரும் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் கொண்டாடப்படும் இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து லால் சலாம் திரைப்படத்திலும் நடித்து முடித்திருக்கும் இவர் அடுத்ததாக டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாக இருக்கும் ‘தலைவர் 170’ திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் அவர்களின் ‘தலைவர் 171’ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக சில தகவல்கள் ஏற்கனவே வெளியாகி பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் இது குறித்த கேள்விக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அளித்திருக்கும் பதில் தற்போது வைரலாகி வருகிறது.

அதாவது கோவையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருந்த லோகேஷ் கனகராஜ் அவர்கள் ‘தலைவர் 171’ திரைப்படம் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு “தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து முறையாக அறிவிப்பு வரும் என்றும், நான் இப்போது அதைப் பற்றி சொல்ல முடியாது” எனவும் கூறி மறைமுகமாக உறுதி செய்து இருக்கிறார். இதனால் லியோ படத்தை தொடர்ந்து விரைவில் தலைவர் 171 திரைப்படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.