தளபதி 67 திரைப்படம் பற்றி லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ள தகவல் வைரல்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி,மாஸ்டர், விக்ரம் போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள இவர் அடுத்ததாக தளபதி விஜய்யை இயக்க இருக்கிறார். தளபதி 67 என்று தற்போது தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டிருக்கும் இப்படம் பற்றின அப்டேட்களுக்கு ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளோடு இருந்து வருகின்றனர். இந்நிலையில் இப்படம் பற்றின அப்டேட்கள் குறித்த தகவலை லோகேஷ் கனகராஜ் அண்மையில் எடுக்கப்பட்ட பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.

அதிரடியான கேங்ஸ்டர் திரைப்படத்தில் விஜய்!!… வாரிசுக்கு பின் இணையத்தை கலக்க இருக்கும் தளபதி 67.!

அதில் அவர், தளபதியின் வாரிசு திரைப்படம் ரிலீசுக்கு பின் தளபதி 67 திரைப்படத்திற்கான அப்டேட்களை போதும் போதும் என்ற அளவிற்கு தருகிறேன். இப்போதைக்கு டைவர்ஷன் வேணாம்னு நினைக்கிறேன் அவரது படம் தற்போது ரிலீஸ் ஸ்டேஜில் இருக்கிறது அதனால் வேற எந்த விஷயமும் டைவர்ட் பண்ண வேணான்றதால நான் சொல்றது இல்லை என அவர் கூறியிருக்கிறார். மேலும் இப்படம் முற்றிலும் ஒரு கேங்ஸ்டர் பற்றிய படம் தான் என்றும் பகிர்ந்திருக்கிறார். அடுத்த ஆண்டு ஜனவரிக்கு பின் தளபதி 67 படத்திற்கான அப்டேட்கள் ஒவ்வொன்றாய் வரும் என்று அவர் தெரிவித்துள்ளதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இந்த தகவலை சமூக வலைதள பக்கத்தில் வைரலாக்கி வருகின்றனர்.