அஜித் குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அளித்திருக்கும் பேட்டியின் தகவல் வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை உலகமே ஆச்சரியத்துடன் பார்க்க கூடிய முக்கிய இயக்குனராக திகழ்ந்து வருபவர் லோகேஷ் கணக்கர். இவரது இயக்கத்தில் வெளியான மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட நான்கு படங்களும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது கோலிவுட்டில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் இவர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் “லியோ” திரைப்படத்தை இயக்கி வருகிறார். தளபதி விஜய் நடிப்பில் ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது. இவர் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாணவர்களின் கேள்விகளுக்கு பல சுவாரசியமான பதில்களை கொடுத்து மகிழ்ச்சி அடைய செய்திருந்தார். அந்த வகையில் நடிகர் அஜித்துடன் எப்போது இணைவீர்கள் என்று மாணவர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ‘வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக பண்ணுவேன்’ என கூறியுள்ளார். இவரது இந்த பதிலை தல ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் வைரலாக்கி வருகின்றனர்.