பட தயாரிப்பில் இறங்கி உள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். 

தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய கைதி திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றது. அதன் பிறகு உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். 

கமலை தொடந்து விஜய் வைத்து லியோ படத்தை இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. மேலும் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து படம் இயக்குவதற்கான ஆரம்பகட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார். 

இந்த நிலையில் ஜி ஸ்கொயர் என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளார். இந்த நிறுவனத்தில் ஆரம்ப கட்டமாக தனக்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உதவி இயக்குனர்கள் ஆகியோர் இயக்கம் படங்களை தயாரிக்கப் போவதாக அறிவித்துள்ளார். 

முதலில் அப்பாஸ் ரஹ்மத் என்பவர் இயக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பைட் கிளப் என்ற பெயரில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் உறியடி படத்தின் இயக்குனரும் நாயகன் ஆன விஜயகுமார் ஹீரோவாக நடிக்க உள்ளார். 

இதோ அந்த போஸ்டர்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.