விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி வில்லன் ஆனது எப்படி என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாக மாஸான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

இந்தப் படத்தை தொடர்ந்து விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக நடித்திருந்தார். ஆனால் இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ் முதலில் கதை எழுதும் போது விஜய் சேதுபதிக்கு ஒரு ரோல் என்று தான் எழுத வேண்டும் என நினைத்துள்ளார். விஜய் சேதுபதியும் வில்லன் ரோல் வேண்டாம் வேறு ஏதாவது பண்ணலாம் என சொல்லி உள்ளார்.

ஆனால் கதை எழுதும் போது கமலுக்கு நிகரான வில்லனாக விஜய் சேதுபதியை தவிர வேறு யாரையும் நினைத்து பார்க்க முடியவில்லை. கடைசியில் விஜய் சேதுபதியை நேரில் சந்தித்து நீங்கள் தான் வில்லன் என சொன்னதும் அவர் சிரித்தார். மேலும் நீ இங்க தான் வந்து நிற்பேனு எனக்கு தெரியும் சரி பண்ணிடலாம் என கூறியதாக லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

விக்ரம் படத்தின் வெற்றியை கடந்து லோகேஷ் கனகராஜ் தற்போது தளபதி விஜயை வைத்து லியோ படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.