தான் மதம் மாறி விட்டதாக நடிகர் லிவிங்ஸ்டன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் லிவிங்ஸ்டன். ஹீரோவாக பல படங்களில் நடித்துள்ள இவர் தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அதே போல் சின்னத்திரையிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில் இவர் கிறிஸ்துவ மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறி விட்டதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதோடு தனக்கு கிருஷ்ணரை பிடிக்கும் என்பதால் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா அமைப்பில் இணைந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்துவ மதத்தில் போர் அடித்து விட்டதால் மதம் மாறியதாகவும் தெரிவித்துள்ளார்.