அடுத்த ஆண்டு வெளியாகப் போகும் முன்னணி நடிகர்களின் படங்களின் லிஸ்ட்.. நீங்கள் எந்த படத்துக்காக வெயிட்டிங்.!!
அடுத்த ஆண்டு வெளியாக போகும் படங்கள் குறித்து பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்கள் என்றாலே ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்த வருகின்றனர் அந்த வகையில் அடுத்த ஆண்டு அடுத்தடுத்து தொடர்ந்து படங்கள் வெளியாக உள்ளது அது குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
அடுத்த ஆண்டு முன்னணி நடிகர்களின் திரைப்படம் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.தளபதி விஜயின் கடைசி படமான ஜனநாயகன் ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
அதனைத் தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கருப்பு திரைப்படமும் வெளியாகும்.
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெளியாக உள்ளது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா 46 திரைப்படமும் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா 47 திரைப்படமும் வெளியாகியுள்ளது.
இது மட்டும் இல்லாமல் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் 64 திரைப்படமும் அடுத்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் அடுத்த ஆண்டு ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. அடுத்த ஆண்டு வெளியாகப் போகும் இந்த படங்களில் உங்களுடைய ஃபேவரைட் திரைப்படம் எது? நீங்க எந்த படத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

