விஜய் தேவர் கொண்ட லிகர் படத்தின் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வரும் மாசன மியூசிக்கை ரசிகர்கள் ரசித்து வைரளாக்கி வருகின்றனர்.

தென்னிந்திய நடிகராக வலம் வருபவர் தான் விஜய் தேவர்கொண்டா. இவர் தற்போது “லிகர்” என்னும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தை இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கி வருகிறார். இதில் குத்துச்சண்டை வீரராக நடிக்கும் விஜய் தேவர் கொண்டவுடன் பிரபல குத்துச்சண்டை வீரரான மைக் டைசன் அவர்கள் இணைந்து நடிக்கிறார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், ரோனிட் ராய், விஷு ரெட்டி போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

தர்மா புரொடக்ஷன்ஸ் மற்றும் பூரி கனெக்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு மணி சர்மா பின்னணி இசை அமைத்த விஷ்ணு சர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் ஐந்து மொழிகளில் வெளியாக உள்ள இப்படம் பான் இந்தியா படமாக வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாக உள்ளது. மேலும் சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் மற்றும் போஸ்டர்கள் வெளியானதை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதில் ஒரு சாதாரண இடத்தில் இருந்து வந்த கதாநாயகன் இந்திய அளவில் எவ்வாறு குத்துச் சண்டை வீரராக உயர்ந்தார் என்பதை ஆக்ஷன் கலந்து சொல்லி இருக்கும் இப்படத்தின் கதையை முழுமையாக பார்க்க ரசிகர்கள் ஆவலோடு இருக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் புதிய வீடியோ ஒன்றை விஜய் தேவர் கொண்ட தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதில் வரும் மாசான பாடலை ரசிகர்கள் ரசித்து வைரலாக்கி வருகின்றனர்.