விஜய் ரசிகர்களுக்கான மகிழ்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகில் பிரபலம் முன்னணி நட்சத்திரமாக திகழ்பவர் தனுஷ். இவரது நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழில் வாத்தி, தெலுங்கில் சார் என இரண்டு மொழிகளிலும் உருவாகி இருக்கும் திரைப்படம் வரும் 17ஆம் தேதி நேரடியாக வெளியாக உள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியாக இருக்கும் இப்படத்தில் விஜய் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் வழங்க இருக்கும் வாத்தி திரைப்படத்தின் இடைவெளி நேரத்தில் அந்நிறுவனம் தயாரிப்பில் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் லியோ திரைப்படத்தின் டைட்டில் ப்ரோ வீடியோவை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.