லியோ படபிடிப்பு தளத்தில் உபயோகம் செய்யப்படும் கேமராக்களின் வீடியோவை படக்குழு சர்ப்ரைசாக வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

தற்போது காஷ்மீரில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் நிலையில் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா சர்ப்ரைஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

அதாவது, லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு உயர்தர Red V RAPTOR XL கேமராக்கள் மூலம் ஒளிப்பதிவு செய்யப்பட்டு வருவதாக கேமராக்களின் வீடியோவை படப்பிடிப்பு தளத்திலிருந்து ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா அதிகாரபூர்வமாக பகிர்ந்துள்ளார். இதனால் மகிழ்ச்சியடைந்த தளபதி ரசிகர்கள் இதனை வைரலாக்கி வருகின்றனர்.