லியோ படத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியான சஞ்சய் தத்தின் போட்டோ ட்ரெண்டிங்காகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபலம் முன்னணி நட்சத்திரமாக விளங்கிவரும் தளபதி விஜய் தற்போது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மிஷ்கின், சாண்டி உள்ளிட்ட பல உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது சென்னையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் சென்னை ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சஞ்சய் தத்துடன் இப்படத்தில் நடிக்கும் மலையாள நடிகர் பாபு ஆண்டனி தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.