ரீல்ஸ் வீடியோவில் சாதனை செய்திருக்கும் தளபதி விஜய்யின் லியோ பாடல்.

கோலிவுடில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் தளபதி விஜய். இவர் வாரிசு திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல உச்ச நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் கடும் குளிரில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் பாடல் ரிலீஸ் வீடியோவில் புதிய சாதனை படைத்திருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பிளடி ஸ்வீட் பாடல் இதுவரை இன்ஸ்டாகிராமில் 30 ஆயிரத்திற்கும் மேல் ரீல்ஸ் வீடியோவாக செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தகவலை சோனி மியூசிக் சவுத் நிறுவனம் twitter பக்கத்தில் அதிகாரவபூர்வமாக அறிவித்துள்ளது. இதனை விஜய் ரசிகர்களும் மகிழ்ச்சியுடன் வைரலாக்கி வருகின்றனர்.