
லியோ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்கள் இணையத்தில் லீக்காக படக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்க பிரியா ஆனந்த் இரண்டாவது நாயகியாக நடிக்கிறார். அது மட்டுமல்லாமல் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மிஷ்கின், மாதீவ் தாமஸ் உட்பட இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
சூட்டிங் ஸ்பாட்டில் விஜயை சந்திப்பதற்காக செல்லும் ரசிகர்கள் அங்கே எடுக்கும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இணையத்தில் லீக்காக்கி வருகின்றனர்.

இதனால் தயாரிப்பு நிறுவனம் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கும் வீடியோக்களை இணையத்தில் பகிர வேண்டாம். அப்படி பகிர்ந்தால் அவை முன்னறிவிப்பின்றி நீக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.