காஷ்மீரை தொடர்ந்து லியோ படத்தின் சூட்டிங் எங்கே நடக்கப் போகிறது என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

Leo Movie Upcoming Shooting Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வம்சி இயக்கத்தில் வெளியான திரைப்படம் வாரிசு.

இந்த படத்தைத் தொடர்ந்து தற்போது தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு எங்கே எப்போது நடக்கும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது காஷ்மீரில் நடக்கும் லியோ படத்தின் படப்பிடிப்புகள் மற்றும் 30ஆம் தேதி முடிவடைய உள்ளது.

அதன் பிறகு சிறிய இடைவெளிக்கு பிறகு இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.