லியோ திரைப்படத்தின் முக்கிய பாடலுக்கான அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

கோலிவுட் திரை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் முக்கிய திரைப்படங்களில் ஒன்று லியோ. தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்டாக இதில் இடம் பெற இருக்கும் முக்கிய பாடலுக்கான அப்டேட் ஒன்று வைரலாகி வருகிறது.

அதன்படி, லியோ படத்தின் முக்கிய பாடலுக்கான படப்பிடிப்பை இன்று படக்குழு படமாக்க இருப்பதாகவும் அதில் 2000 நடன கலைஞர்கள் விஜயுடன் நடனமாட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்தப் பாடல் இப்படத்தின் மிகவும் முக்கியமான பாடல் என்பதால் இதனை பிரம்மாண்டமாக படமாக்கவும் படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.