லியோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்ற வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தொடங்கிய ரிலீஸ் குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இன்று தளபதி விஜயின் பிறந்தநாள் என்பதால் நள்ளிரவு 12 மணிக்கு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதை தொடர்ந்து மாலை 6:30 மணிக்கு இது படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக்ககாக நான் ரெடி என்ற பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி தற்போது நான் ரெடி ஃபர்ஸ்ட் சிங்கர் ட்ராக் வீடியோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.