
ரத்தம் தெறிக்க இணையத்தில் வெளியாகி உள்ளது லியோ பர்ஸ்ட் லுக் போஸ்டர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக லியோ என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை லலித்குமார் தயாரித்துள்ளார். தளபதி விஜயின் பிறந்தநாள் என்பதால் இந்த படத்தின் போஸ்டர் மற்றும் சிங்கிள் ட்ராக் குறித்த அறிவிப்புகள் வெளியாகி இருந்தன.
நான் ரெடி என்ற பர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை வெளியாக உள்ள நிலையில் தளபதி விஜயின் பிறந்தநாள் ட்ரீட்டாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நள்ளிரவு 12 மணிக்கு வெளியானது.

ரத்தம் சொட்ட வெளியான இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பதிவில் மட்டும் இரண்டு புள்ளி எட்டு மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.
மேலும் இந்த போஸ்டரில் விஜய்க்கு பின்புறத்தில் ஒரு கை மேலோங்கி இருப்பது போன்று உள்ளது. இதனால் அந்த கை யாருடையது? இந்த போஸ்டர் சொல்ல வருவது என்ன என்ற விவாதங்களும் சமூக வலைய தளங்களில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.