லியோ ஆடியோ லான்ச் குறித்து விஜய் எடுத்திருக்கும் புதிய முடிவை தயாரிப்பாளர் பகிர்ந்திருக்கிறார்.

கோலிவுட் சினிமாவில் மாபெரும் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் “லியோ” திரைப்படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைப்பில் தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக காஷ்மீரில் நடைபெற்று வந்ததை தொடர்ந்து தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன், பாபு ஆண்டனி, ஆக்சன் கிங் அர்ஜுன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படத்தின் அப்டேட்களுக்காக ரசிகர்கள் எப்போதும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து விஜய் எடுத்திருக்கும் புதிய முடிவை படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தெரிவித்து இருக்கிறார். அது தற்போது ரசிகர்களை உற்சாகப்படுத்தி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அதில் அவர், ‘லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை சென்னையை தாண்டி தென் மாவட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு நகரில் வைக்க விஜய் விரும்புவதாக தயாரிப்பாளர் லலித் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருக்கிறார். இதுவரை விஜய் படங்களின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வந்த நிலையில் விஜயின் இந்த புதிய திட்டம் தென்னிந்திய ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.