காஷ்மீரில் இருந்து லெஜென்ஸ் சரவணன் வெளியிட்டு இருக்கும் லேட்டஸ்ட் ட்வீட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வரும் தளபதி விஜய் அவர்கள் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்து லியோ திரைப்படத்தில் தனது 67 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்க திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் மேனன் உள்ளிட்ட பல உச்ச நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் காஷ்மீரில் கடும் குளிரில் தீவிரமாக நடைபெற்று வரும் இப்படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியாகும் புகைப்படங்கள் அவ்வப்போது இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில் சில தினங்களுக்கு முன்பு காஷ்மீரில் இருந்து லெஜெண்ட் சரவணன் அவர்கள் வீடியோ ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

இதனால் இப்படத்தில் லெஜென் சரவணன் நடிக்கிறாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் வைரலாக பேசப்பட்டு வந்தது. இது குறித்து படக்குழுவும் எந்த ஒரு விளக்கமும் இதுவரை கொடுக்காமல் இருந்து வரும் நிலையில் லெஜன்ட் சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் “காத்திருந்த நேரம் நெருங்கி விட்டது, சில தினங்களில் சுவாரசியமான அறிவிப்புகள் வெளியாகும்” என்று புகைப்படத்துடன் குறிப்பிட்டு மீண்டும் பகிர்ந்து இருக்கிறார். அது தற்போது ரசிகர்கள் மத்தியில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.