கோலாகலமாக நடந்த இசை வெளியீட்டு விழாவில் விரைவில் ரசிகர்களை சந்திக்கிறேன் என லெஜன்ட் சரவணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் லெஜன்ட் சரவணன் ஏற்கனவே சில விளம்பர படங்களில் நடித்ததை தொடர்ந்து இயக்குனர்கள் ஜேடி ஜெர்ரி ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த தி லெஜன்ட் என்ற படத்தில் நடித்திருந்தார்.

கோலாகலமாக நடந்த இசை வெளியீட்டு விழா.. விரைவில் ரசிகர்களை சந்திக்கிறேன் - லெஜெண்ட் சரவணன் பேச்சு.!!

உலகம் முழுவதும் சமீபத்தில் திரைக்கு வந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் மாஸ் காட்டி வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த விழாவில் முதல் முறையாக பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றி கூறிய லெஜன்ட் சரவணன் விரைவில் ரசிகர்களை சந்திக்கப் போவதாக அறிவித்துள்ளார். மேலும் அவரது ட்விட்டர் பக்கத்தில் உங்களது அன்புக்கும் ஆதரவுக்கும் மிகப்பெரிய நன்றி விரைவில் உங்களை சந்திக்கிறேன் சந்திக்கிறோம் என பதிவு செய்துள்ளார்.

கோலாகலமாக நடந்த இசை வெளியீட்டு விழா.. விரைவில் ரசிகர்களை சந்திக்கிறேன் - லெஜெண்ட் சரவணன் பேச்சு.!!

இது குறித்த இவரது ட்விட்டர் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.