தி லெஜன்ட் திரைப்படம் OTT-ல் சாதனை படைத்து வருகிறது.

தமிழ் சினிமாவில் நடிகர்களின் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகி லெஜன்ட் சரவணன் அவர்களின் நடிப்பில் வெளியான திரைப்படம் தி லெஜன்ட். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திரையரங்குகளில் வெளியான இதை திரைப்படம் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவின் படங்களுக்கு இணையாக கொண்டாடப்பட்டது.

இதையடுத்து சில மாத இடைவெளிக்குப் பிறகு தற்போது இந்த படம் ஹாட் ஸ்டாரில் வெளியாகி உள்ளது. OTT-ல் நேற்று வெளியான இந்த திரைப்படம் ஹாட்ஸ்டாரில் எக்கச்சக்கமான பார்வையாளர்களைப் பெற்று நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது.

வார விடுமுறை நாட்கள் என்பதால் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.