நடிகர் லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் “ருத்ரன்”. இப்படத்திற்கான ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் இதனை வைரலாகி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் பிரபல நட்சத்திரமாக திகழ்பவர் தான் ராகவா லாரன்ஸ். இவர் பல திறமைகளைக் கொண்டவர். ஏனென்றால் இவர் ஒரு நடன இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், கதையாசிரியர் போன்ற பல துறைகளில் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது தயாராகி கொண்டிருக்கும் படம்தான் “ருத்ரன்”. இப்படத்தின் மூலம் பல வெற்றி படங்களை தயாரித்த ஃபைவ் ஸ்டார் கதிரேசன் அவர்கள் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். மேலும் இப்படத்தில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், ப்ரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த “ருத்ரன்” திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் வெளியாக உள்ளது. இதையடுத்து இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் ஐதராபாத்திரத்தில் துவங்கவுள்ளது. இதற்காக தொழிற்சாலை போன்று செட் அமைக்கப்பட்டு வருகிறது.

அண்மையில் இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை தூண்டி உள்ள நிலையில் தற்போது இப்படத்திற்கான ரிலீஸ் தேதியை பட குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் டிசம்பர் 23-ஆம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியிடப்படுகிறது. இதையொட்டி சரக்கு பாட்டிலுடன் இருக்கும் போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் இந்த தகவலை வைரலாக்கி வருகின்றனர்.