
வாட்ஸ் அப் காலில் இயக்குனர் ஒருவர் ஆறு மாதம் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாக தெரிவித்துள்ளார் லாவண்யா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் லாவண்யா. முதலில் விஜே சித்ரா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் அந்த நிலையில் அவரது மறைவுக்குப் பிறகு காவியா அறிவுமணி நடிக்க தொடங்கினார்.

வெள்ளித்திரை வாய்ப்பு காரணமாக காவியாவும் இந்த சீரியலில் இருந்து வெளியேற தற்போது லாவண்யா நடித்து வருகிறார். இவர் அளித்த பேட்டி ஒன்றின் இயக்குனர் ஒருவர் தன்னை பெரிய நாயகி ஆக்குவதாக சொல்லி whatsapp காலில் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்தார் என தெரிவித்துள்ளார்.
இதையெல்லாம் நம்பினால் எதிர்காலம் பாதிக்கும் என்ற காரணத்தினால் நான் அந்த இயக்குனரை கண்டு கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.

இவர் அளித்துள்ள இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. யார் அந்த இயக்குனர் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.