பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங்கில் புது முல்லை பங்கேற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் நேற்று முதல் பாக்கியலட்சுமி சீரியலுடன் இணைந்து ஒரு மணி நேர எபிசோடாக ஒளிபரப்பாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஷூட்டிங்கில் புது முல்லை.. இனி முல்லை கதாபாத்திரத்தில் இவர் தான் - வைரலாகும் ஃபோட்டோ

சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் கதிருக்கு ஜோடியாக முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவியா அறிவுமணி வெள்ளித்திரை பட வாய்ப்பு காரணமாக சீரியலில் இருந்து வெளியேற இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கிறது.

இப்படியான நிலையில் தற்போது இந்த சீரியல் முல்லை கதாபாத்திரத்தில் நடிகை லாவண்யா ஏற்று நடித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சிப்பிக்குள் முத்து சீரியலில் நாயகியாக நடித்து வந்தவர் தான் லாவண்யா. தற்போது இந்த சீரியல் முடிவுக்கு வந்து விட்டதால் முல்லை கதாபாத்திரத்தில் லாவண்யா நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஷூட்டிங்கில் புது முல்லை.. இனி முல்லை கதாபாத்திரத்தில் இவர் தான் - வைரலாகும் ஃபோட்டோ

விரைவில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் புதிய முல்லையாக லாவண்யாவை பார்க்கலாம்.