கூலி படம் எப்படி இருக்கு? லதா ரஜினிகாந்த் சொன்ன விஷயம்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

கூலி படம் குறித்து லதா ரஜினிகாந்த் விமர்சனம் தெரிவித்து உள்ளார்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் 14ஆம் தேதி அதாவது நாளை திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் ஸ்ருதிஹாசன், உபேந்திரா, நாகார்ஜுனா, சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஏற்கனவே இந்த படத்தை பார்த்த உதயநிதி ஸ்டாலின் படத்தை பாராட்டி இருந்த நிலையில் தற்போது ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் அவர்கள் படத்தை பார்த்துவிட்டு ரஜினியின் டாப் படங்களில் கூலியும் ஒன்றாக இருக்கும் என கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
