நடிகர் சூர்யா தனது குடும்பத்தாருடன் மும்பையில் உணவு அருந்திவிட்டு வெளியில் வரும்போது போட்டோகிராபர்ஸிடம் சிக்கியது வைரலாகி வருகிறது.
நடிகர் சூர்யாவும், ஜோதிகாவும் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த ‘சூரரைப் போற்று’ படத்தின் ஹிந்தி ரீமேக்கை அக்ஷய் குமார் வைத்து தயாரித்து வருகின்றனர். அதனால் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா தங்களது குழந்தைகளான தியா மற்றும் தேவ் ஆகியோருடன் மும்பை சென்றுள்ளனர்.
அப்போது இவர்கள் நக்மா உள்ளிட்ட குடும்பத்தினரோடு அங்குள்ள பிரபல உணவகத்தில் ஒன்றாக உணவருந்தி விட்டு வெளியே வந்தனர். அதை அறிந்த மும்பை மீடியா ஆட்கள் அவர்களை போட்டோஸ் எடுக்க சுற்றி வளைத்து விட்டனர்.
அப்போது தன்னையும் தனது மனைவியையும் மட்டும் படமெடுக்குமாறு புகைப்படக்காரர்களிடம் கேட்டுக் கொண்ட சூர்யா, குழந்தைகளின் பிரைவசியை மதிக்கும்படி கேட்டுக் கொண்டார். அதனை மதித்த மீடியா ஆட்களும் சூர்யா, ஜோதிகா மற்றும் நக்மா ஆகியோரை மற்றும் படம் பிடித்துள்ளனர். இந்த பரபரப்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.