வாடிவாசல் படம் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகி வென்றதை தொடர்ந்து தற்போது பாலா இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தார். இப்படி அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருந்து வரும் சூர்யா அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார்.

டெஸ்ட் சூட் மட்டுமே முடிவடைந்திருந்த நிலையில் இந்த படம் பற்றி எந்த ஒரு தகவலும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் சூட்டிங் டிசம்பர் மாதத்தில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது சூர்யா ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.