வலிமை படத்தின் வியாபாரம் சூடு பிடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Latest Updates of Valimai Bussines : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படம் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு பயப்படுகிறது : ராகுல்  விமர்சனம்

இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் வங்கி இருந்த நிலையில் தற்போது இதனை ஏரியா ஏரியாவாக பிடித்து விற்கும் பிசினஸ் தொடங்கியுள்ளது. ஏற்கனவே செங்கல்பட்டு ஏரியாவில் இந்த பிரம்மாண்ட விலைக்கு படம் விலை போயுள்ளது.

மேலும் மற்ற இடங்களிலும் படத்தை வாங்க கடும் போட்டா போட்டி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தொகை எவ்வளவு பெரியதாக இருந்தாலும் படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் தயார் நிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் வலிமை படம் பிசினஸ் தளபதி விஜய் படங்களை முந்துமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Ajith ரசிகர்களுக்கு காத்திருக்கும் Surprise – Dhruv Vikram அடுத்த படம் இவருடனா? | Latest Cinema News

இந்த தகவல் அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.