தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் தற்போது 2 பாயிண்ட் ஓ படத்தின் ரிலீசுக்கான வேலையில் பிஸியாக இருந்து வருகிறார்.

இந்த படத்திற்கு பிறகு கமல்ஹாசன் நடிப்பில் உருவாக உள்ள இந்தியன் 2 படத்தை இயக்க உள்ளார். அதற்கான ஆரம்பக்கட்ட வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் DOP பணிகளை பார்ப்பதற்காக ரவி வர்மன் கமிட்டாகி உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா கமிட்டாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியன் 2 படம் பற்றி வெளியான அதிரடி அறிவிப்பு - மாஸ் காட்டும் கூட்டணி.!