Latest Update About Valimai

வலிமை படம் பற்றிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

Latest Update About Valimai : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த திரைப்படத்தை எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஆனால் படக்குழு எந்த வித அப்டேட்டையும் வெளியிடாமல் அமைதி காத்து வந்தது.

இந்த நிலையில் தற்போது படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முழுவதும் முடிவடைந்து எடிட்டிங் பணிகள் தொடங்கி இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.