அதிதி ஷங்கரின் லேட்டஸ்ட் ஆன போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமான திரைப்படங்களை இயக்கி ரசிகர்களை வியக்க வைத்து முன்னணி இயக்குனராக திகழ்பவர் தான் இயக்குனர் ஷங்கர். அவரது மகள் தான் அதிதி ஷங்கர். இவர் தற்போது கார்த்தியின் விருமன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

இப்படம் வெளியாவதற்கு முன்பே தனது க்யூட்டான பேச்சு மற்றும் நடவடிக்கையால் அனைவரையும் சுலபமாக கவர்ந்துள்ள அதிதி ஷங்கர் அடுத்ததாக சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் நடிக்க தயாராகி இருக்கிறார்.

இதற்கிடையில் தனது சமூக வலைதள பக்கத்தில் விதவிதமாக போட்டோ ஷூட் புகைப்படங்களை அவ்வப்போது பதிவிட்டு கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவது மட்டுமின்றி இணையத்தில் வைரலாகி வருகிறது.