இயக்குனர் வெங்கட்பிரபு அடுத்ததாக இயக்க இருக்கும் படத்தின் ஹீரோ குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் தான் வெங்கட் பிரபு. இவர் இயக்கத்தில் வெளியான சிம்புவின் “மாநாடு” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட் அடித்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது வெங்கட்பிரபு முன்னணி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை வைத்து “NC22” என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

இதில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வருகிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் வெங்கட்பிரபு இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. அதாவது இவர் இயக்கம் இருக்கும் அடுத்த படத்தில் கதாநாயகனாக நடிக்க ‘நான் ஈ’ திரைப்படத்தில் வில்லனாக நடித்து அனைவருக்கும் பரிச்சயமான நடிகர் கிச்சா சுதீப் நடிக்க உள்ளார்.

இவர் கன்னட மொழியில் முன்னணி ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருப்பவர். தற்போது கிச்சா சுதீப் ஹீரோவாக நடிக்கும் படத்தை வெங்கட்பிரபு அடுத்ததாக இயக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படம் பான் – இந்தியா திரைப்படமாக தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் வரும் நவம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.