நடிகர் ரஜினிகாந்தை தொடர்ந்து தளபதி விஜயும் தனது வீடு மற்றும் அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றியுள்ளார்.

வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி அனைவரும் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறோம். இதற்காக அரசு பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில் பிரதமர் நரேந்திர மோடி வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் மூவர்ண தேசியக் கொடி ஏற்றி வைக்குமாறு அனைவரிடமும் வலியுறுத்தி இருக்கிறார்.

நடிகர் ரஜினிகாந்தை தொடர்ந்து வீட்டில் முன் தேசிய கொடியை பறக்க விட்ட தளபதி விஜய் - வைரலாகும் புகைப்படங்கள்.

அதோடு மட்டுமல்லாமல் இந்திய மக்கள் அனைவரும் தங்களது சமூக வலைத்தளப்பக்கங்களில் ப்ரொபைல் பிக்சரில் தேசிய கொடியின் படத்தை வைக்கும்மாறும் கூறியுள்ளார். இதனைப் பின்பற்றும் வகையில் முதலில் நடிகர் ரஜினிகாந்த் தனது ப்ரொபைல் பிக்சரை மாற்றி வைத்தார் அதன் பிறகு தனது வீட்டின் முன்பு மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

நடிகர் ரஜினிகாந்தை தொடர்ந்து வீட்டில் முன் தேசிய கொடியை பறக்க விட்ட தளபதி விஜய் - வைரலாகும் புகைப்படங்கள்.

அதனைத் தொடர்ந்து தற்போது பல பிரபலங்களும் தங்களது வீட்டின் முன்பு தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகர் விஜய்யும் தனது வீடு மற்றும் அலுவலகத்தில் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.