சின்னத்திரை சீரியல் நடிகை ரச்சிதா தற்பொழுது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

தமிழில் சின்னத்திரை சீரியலில் நடிக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இவர் ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதையடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அனைவருக்கும் பிடித்த பிரபல சீரியலான ‘சரவணன் மீனாட்சி’ இரண்டாம் பாகத்தில் நடித்தார். அதன் மூலம் பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர் தொடர்ந்து ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்ற சீரியலில் நடித்து வந்தார் அதன் பின் சில பல காரணங்களால் அந்த சீரியலில் இருந்து பாதியிலேயே விலகிவிட்டார்.

தற்பொழுது கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சொல்ல மறந்த கதை’ என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் தேவயானியின் “புதுப்புது அர்த்தங்கள்” என்ற மெகா தொடரில் ஜான்சி ராணி என்ற மிரட்டலான முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இது குறித்த வீடியோ பதிவை ரச்சிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.