நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் அக்கவுண்டில் ப்ரொபைல் பிக்சரில் தேசியக் கொடியை மாற்றியுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க தொடங்கி இருக்கும் படம் தான் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பில் ஆர்வம் காட்டி வரும் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது 75 ஆவது சுதந்திர தினம் வருகின்றதால் தனது ட்விட்டர் அக்கவுண்டில் ப்ரொபைல் பிக்சரில் தேசிய கொடியை மாற்றியுள்ளார்.

அதாவது வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி அனைவரும் நமது இந்திய நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறோம். இதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. மேலும் இந்த வருட சுதந்திர தினத்திற்கு பிரதமர் மோடி ஆகஸ்ட் 13 முதல் 15 ஆம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் மூவர்ண தேசியக் கொடியை ஏற்ற கூறி வலியுறுத்தி இருக்கிறார்.

அதோடு மட்டுமல்லாமல் இந்திய மக்கள் அனைவரும் தங்களது சமூக வலைதள பக்கங்களின் ப்ரொபைல் பிக்சரில் தேசிய கொடி படத்தை வைக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். அதனால் பிரதமர் மோடியின் வேண்டுகோளைமதித்து பல பிரபலங்களும், பொதுமக்களும் தங்களது ப்ரொபைல் பிக்சரை மாற்றி வருகின்றனர். இந்நிலையில் 6.2 மில்லியன் பின் தொடர்பாளர்களைக் கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் அவரது ட்விட்டர் அக்கவுண்ட் ப்ரொபைல் பிக்சரில் தேசிய கொடியை மாற்றி வைத்திருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.