நடிகர் விமலுக்கு அமெரிக்க தேசிய வணிக பல்கலைக்கழகம் வழங்கப்பட்டு கௌரவ டாக்டர் பட்டம் . இது குறித்த தகவல் தற்போது வெளியாகி ரசிகர்களின் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெற்றியின் உச்சத்தை தொட வேண்டும் என்று போட்டி போட்டு நடித்து வரும் பல ஹீரோக்களில் ஒருவர்தான் நடிகர் விமல். ஒரு சில படங்களில் பிரபல ஹீரோக்களுக்கு துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குனர் பாண்டியன் இயக்கத்தில் வெளியான ‘பசங்க’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானார். அதில் கிடைத்த வெற்றி தொடர்ந்து களவாணி, கலகலப்பு, வாகை சூடவா போன்ற நகைச்சுவை மிகுந்த படங்களில் நடித்த பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘விலங்கு’ என்கிற வெப்தொடர் ஓடிடியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதற்குப்பின் பல சர்ச்சைகளில் மாட்டியிருக்கும் நடிகர் விமலின் பல தகவல்கள் அவ்வப்போது வெளியாகிக் கொண்டிருந்த நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் நடிகர் விமலுக்கு அமெரிக்க தேசிய வணிக பல்கலைக்கழகம் இவருக்கு “கௌரவ டாக்டர் பட்டம்” வழங்கியுள்ளது.

அதாவது ஜூலை 26 அன்று அமெரிக்க பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், ‘விமல் சமர்ப்பித்து உள்ள சாதனைகள் மற்றும் பங்களிப்பை ஆராய்ந்தோம். இது குறித்து மகிழ்ச்சி அடைந்தோம். உங்களின் முயற்சி மிகவும் பாராட்டத்தக்கவை. உங்கள் விண்ணப்பத்தை கவனமாக மதிப்பாய்வு செய்த பிறகு எங்கள் கல்வி ஆலோசனை குழு உங்களுக்கு டாக்டர் ஆப் ஆர்ட்ஸ் என்ற பட்டத்தை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறது. எனவே எங்கள் பட்டமளிப்பு விழாவில் கௌரவ டாக்டர் பட்டதை பெற உங்களை அன்புடன் அழைக்கிறோம் . என தெரிவித்துள்ளது. இந்த தகவல் தற்போது ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தியுள்ளது.