labber pandhu movie 17 days collection
labber pandhu movie 17 days collection

லப்பர் பந்து படத்தின் 17 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளியான திரைப்படம் லப்பர் பந்து. விளையாட்டை மையமாக வைத்து உருவான இந்த கதையில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

மேலும் சுவாசிகா, சஞ்சனா, பாலசரவணன், டி எஸ் கே, காளி வெங்கட் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் வசூலிலும் தூள் கிளப்பி வருகிறது. அந்த வகையில் தற்போது 17 நாட்களில் 33 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.