Laabam Movie Release Update

எஸ் பி ஜனநாதன் இயக்கிய கடைசி படம் என லாபம் திரைப்படம் முழுமையாக முடிவடைந்து விட்டதாகவும் திட்டமிட்டபடி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Laabam Movie Release Update : தமிழ் சினிமாவில் இயற்கை, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை, அரவான், ஈ, பூலோகம் உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்பி ஜனநாதன் கடந்த வாரம் உடல்நலக் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லாபம்.

விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் என பல திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7சி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் எஸ்பி ஜனநாதன் அவர்கள் லாபம் படத்தின் மொத்த பணிகளையும் கிட்டத்தட்ட முடித்து விட்டார். இன்னும் சிறு சிறு வேலைகள் மட்டுமே பாக்கியுள்ளது. அதனை எங்கள் குழுவினரை வைத்தே முடித்து விடுவோம். படம் திட்டமிட்டபடி ஏப்ரல் மாதத்தில் வெளியாகும். இத்திரைப்படம் எஸ்பி ஜனநாதன் அவர்களுக்கு ஒரு மணி மகுடமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என விளக்கம் அளித்துள்ளது.
Attachments area