4 இயக்குனர்கள் இணைந்து இயக்கிய குட்டி ஸ்டோரி படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

Kutty Story Movie Review : தமிழ் சினிமாவில் அந்தலாஜி திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி கொண்டு வருகின்றன. ஏற்கனவே 4 இயக்குனர்கள் இணைந்து பாவக் கதைகள் என்ற வெப் சீரிஸ் தொடர் வெளியானது.

இதனைத் தொடர்ந்து தற்போது குட்டி ஸ்டோரி என்ற பெயரில் அந்தலாஜி திரைப்படம் வெளியாகி உள்ளது. இதனை கௌதம் மேனன், ஏ எல் விஜய், வெங்கட் பிரபு மற்றும் நலன் குமாரசாமி ஆகியோர் இயக்கியுள்ளனர்.

எதிர்பாரா முத்தம் : கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்திலும் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் பகுதியில் அமலாபால் நாயகியாக நடித்துள்ளார். இவர்களின் காம்போ ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது.சிறுவயது கௌதம் மேனனாக நடித்துள்ள வினோத் கிஷன் தன்னுடைய தத்ரூபமான நடிப்பால் மொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளார்.

அவளும் நானும் : ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் மேகா ஆகாஷ் நாயகியாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அமிதாஸ் நாயகனாக நடித்துள்ளார். இந்த கதை பெரியதாக ஈர்க்கவில்லை என்றாலும் அனைவரும் அவர்களின் வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.

லோகம் : வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த பகுதி ஆன்லைன் கேமை மையமாக வைத்து உருவாகியுள்ளது. வெங்கட் பிரபுவின் இயக்கம் வழக்கம் போல ரசிகைகளை கவர்ந்துள்ளது.

ஆடல் பாடல் : நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த குறும்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் அதிதி ஆகியோர் நடித்துள்ளனர். மற்ற கதைகளை காட்டிலும் ஆடல் பாடல் மிகச் சிறந்த கதையாக உருவாகியுள்ளது.

தம்ப்ஸ் அப் :

1. அனைத்து இயக்குனர்களின் இயக்கம்

2. நடிகர், நடிகைகளின் நடிப்பு

3.ஒளிப்பதிவு

தம்ப்ஸ் டவுன் :

1. வழக்கமான லாஜிக்கல் தவறுகள்

REVIEW OVERVIEW
குட்டி ஸ்டோரி விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
kutty-story-movie-reviewமொத்தத்தில் குட்டி ஸ்டோரி ஒரு வித்யாசமான அனுபவத்தை கொடுக்கும் படமாக இருக்கும்.