
Kutty Radhika : பிரபல நடிகையும் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மனைவியுமான குட்டி ராதிகா அகோரியாக மாறியுள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் இயற்கை படத்தின் மூலம் ஷாமுடன் இணைந்து நடித்திருந்தனர் குட்டி ராதிகா.
தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வந்தார்.
அதன் பிறகு தற்போதைய கர்நாடக முதல்வரான குமாரசாமியை ரகசிய திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகளும் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது குட்டி ராதிகா மீண்டும் நடிக்க வந்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் உருவாகி வரும் பைரா தேவி என்ற படத்தில் அகோரியாக நடித்து வருகிறார்.
இந்த படத்தில் இவருடைய கெட்டப் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர வைத்துள்ளது. உடல் முழுவதும் திருநீறு, சூலம் என முற்றிலுமாக மாறியுள்ளார்.
கர்நாடக முதல்வராக குமாரசாமி பதியேற்ற போது குட்டி ராதிகாவை இணையத்தில் அதிகமான மக்கள் தேடி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.