ஜனநாயகன் படத்திற்கு சென்சார் கொடுக்காதது குறித்து கேட்கப்பட்ட கேள்வி.. குஷ்பு கொடுத்த பதில்.!!
ஜனநாயகன் படத்தின் சென்சார் கொடுக்காதது குறித்து குஷ்புவிடம் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
எச் வினோத் இயக்கத்திலும், கே.வி.என் புரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.மேலும் பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் விமான நிலையத்தில் வந்த குஷ்பூ விடம் ஜனநாயகன் சென்சார் கொடுக்காதது குறித்தும் தியேட்டர்கள் குறித்தும் கேள்வி கேட்கப்பட்டுள்ளனர். அதற்கு பதில் அளித்த குஷ்பூ ரெண்டும் வேற வேற சென்சார் கிடைக்கலைன்னு சொல்லும் போது நீங்க ஏதோ ஒரு பக்கம் சாஞ்சு பேசுற மாதிரி இருக்கு. அதே மாதிரி தியேட்டர் கிடைக்கலன்னு சொன்னா அதுக்கு திமுக தான் பதில் சொல்லணும் நான் பதில் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார்.
அதேபோல் ஏற்கனவே பராசக்தி படத்திற்கும் சான்றிதழ் கிடைக்கலான ஒரு விஷயம் போய்கிட்டு இருக்கு படம் நல்லா இருந்தா கண்டிப்பா கொடுத்துடுவாங்க என்று சொல்லி இருக்கிறார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
