திடீர் விலகல் குறித்து குஷ்பு வெளியிட்ட அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் குஷ்பூ. தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வந்த இவர் குண சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

மேலும் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய இவர் பாஜகவில் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார். சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் குஷ்பூ தொடர்ந்து பல விஷயங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார்.

இப்படியான நிலையில் சமூக வலைதள பக்கங்களில் இருந்து கொஞ்ச நாளைக்கு பிரேக் எடுக்க இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இவருடைய இந்த பதிவு அவரது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் அந்த பதிவில் எல்லோரும் பாதுகாப்பாகவும் பாசிட்டிவ்வாகவும் இருங்கள் என பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த பதிவு